சிங்கம் பட பாணியில் வேனில் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா கடத்தல் : போலீசார் சோதனையில் அதிர்ச்சி…!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 8:44 pm
Gutka Seized - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : சிங்கம் பட பாணியில் வேனுக்குள் ரகசிய அறை அமைத்து 546 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்த 4 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அதிகாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட தனிப்படையினர் சின்னாளப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பஞ்சம்பட்டி அருகே சேலத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 30) மற்றும் மைசூர் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (வயது 24) ஆகியோர் ஓட்டி வந்த ஈச்சர் லாரி வண்டியை நிறுத்தி சோதனை செய்ததில் வாகனத்தில் சிங்கம் சினிமா பட பாணியில் 6 அடி அளவில் ரகசிய அதில் அரசால் தடை செய்யப்பட்ட 546 கிலோ (36 முட்டைகள்) குட்கா பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் பஞ்சம்பட்டி பகுதியிலுள்ள ரோஸ் பாண்டி(48) மற்றும் அவரது தம்பி ஜெகன் தினகரன் (45) ஆகியோர்களின் மளிகை கடைக்கு கொண்டுவரப்பட்டது என்பது தெரியவந்தது. இதனையடுத்து ரோஸ்பாண்டியையும் அவரது தம்பி ஜெகன் தினகரனையும் கைது செய்து சின்னாளபட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மொத்தம் நான்கு நபர்களும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Views: - 545

0

0