கனிமவள லாரிகள் மோதி 6 பேர் கொலை.. அமைச்சர் மனோ தங்கராஜ்தான் பொறுப்பு : பொன். ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 March 2024, 9:43 pm
Pon radha
Quick Share

கனிமவள லாரிகள் மோதி 6 பேர் கொலை.. அமைச்சர் மனோ தங்கராஜ்தான் பொறுப்பு : பொன். ராதாகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு!!

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் இன்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். முப்பந்தம் முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்த அவர் அங்கிருந்து நாகர்கோவில் வந்தார்.

நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் அமைச்சராக இருந்தபோது 48 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களைகொண்டு வந்து செயல்படுத்தியுள்ளேன். மீண்டும் இந்த மாவட்டம் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்திச் செல்லப்படுகிறது. ஆனால் இங்குள்ள மக்களுக்கு கட்டுமான பணிக்காக கனிமவளங்கள் கிடைப்பதில்லை. கனிமவள டாரஸ் லாரிகள் மோதி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு இந்த மாவட்டத்தின் அமைச்சர் மனோதங்கராஜ் பொறுப்பேற்க வேண்டும்.அமைச்சர் 6 பேரை கொலைசெய்துயுள்ளார் அதில் நான்கு பேர் கிறிஸ்தவர்கள் அமைச்சருக்கு திமுக கட்சிகாரர்களை பற்றியும் கவலையில்லை ஜாதி காரர்கள் நாடாரை பற்றியும் கவலையில்லை கிறிஸ்தவர்களை பற்றியும் கவலையில்லை குமரி மாவட்ட மக்களுக்காக அவர் இருக்கமாட்டார் என ஆவேசமாக பேசினார்.

அமைச்சரின் பினாமி லாரிகள் என்றாலும் சரி, எந்த லாரியாக இருந்தாலும் அவசியம் இல்லாமல் கேரளாவுக்கு செல்ல அனுமதிக்கமாட்டோம். கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் மனோதங்கராஜ் கூறுகிறார்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் இதுவரை இல்லை. இதிலிருந்து அவர் பொய் சொல்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. அமைச்சரின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகளுக்காக கல், மண் கிடைக்கவில்லை.

இதனால் மூன்று ஆண்டு காலத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக நான்குவழி சாலை அமைக்கும் பணிக்காக 1046 கோடி ரூபாய் கூடுதல் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. அதில் 350 கோடி ரூபாய் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் நிறுவனத்திற்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்தின் ஆளுநர் ரப்பர் ஸ்டாம்பாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அமலாக்கத்துறை பொறுத்திருந்து நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த வகையில் தான் காத்திருந்து அவர்கள் கெஜ்ரிவால் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்கள் கெஜ்ரிவாலுக்கு பலமுறை அவர்கள் சம்மன் அனுப்பியுள்ளார்கள்.

அப்போது அவர் ஆஜராகவில்லை. அப்போதே அவர் ஆஜர் ஆகி இருந்தால்இது போன்ற நடவடிக்கைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தல் பத்திர விவகாரத்தை பொருத்தவரை நாங்கள்எதையும் மறைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்

Views: - 473

0

0