வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 8ம் வகுப்பு மாணவி… விபரீத முடிவின் பின்னணியில் ஆசிரியை… போலீசார் விசாரணை!!

Author: Babu Lakshmanan
1 March 2024, 12:45 pm
Quick Share

ஆசிரியை திட்டியதால் எறும்பு பொடியை குடித்து மாணவி 8ம் வகுப்பு தற்கொலை முயற்சித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் சஜின். ஆட்டோ டிரைவரான இவருக்கு, மனைவி கவிதா மற்றும் கும்ஷா சுவேதா எனும் 13 வயது மகளும் உள்ளனர். மகள் கும்ஷா சுவேதா மணலிக்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வருகிறார்.

ஆட்டோ டிரைவரான சஜின், ஆண்டு இறுதியாகும் நிலையிலும், தனது மகள் படிக்கும் பள்ளிக்கு பயிற்சி கட்டணம் முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த வகுப்பு ஆசிரியர் அந்த மாணவியை வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் தினம்தோறும் திட்டி வந்துள்ளார்.

இதனால், கும்ஷா சுவேதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதனால் நேற்று பள்ளிக்கு சென்ற அந்த மாணவி வீட்டில் இருந்தே எறும்பு பொடி விஷத்தை தண்ணீரில் கலக்கி குடித்து சென்றுள்ளார்.

வகுப்பறையில் இருந்த அந்த மாணவி சக மாணவிகளிடம் தான் விஷம் குடித்திருப்பதை சொன்ன நிலையில், திடீரென மயங்கி சாய்ந்துள்ளார். இதனையடுத்து, தகவல் அறிந்து சென்ற மாணவியின் உறவினர்கள், அவரை சிகிட்சைக்காக தக்கலை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்ததோடு, தக்கலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்றிரவு மருத்துவமனைக்கு வந்த பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிபதி நேரில் வந்து மாணவியிடம் வாக்குமூலம் பெற்று சென்ற நிலையில், தக்கலை போலீசாரும் ஆசிரியரை அழைத்து மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

ஆசிரியர் திட்டியதால் மாணவி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 588

0

0