அம்மாவை காணோம்.. கண்ணீருடன் காவல் நிலையத்தில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் புகார்..!

Author: Vignesh
22 June 2024, 6:27 pm

குடியாத்தத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாயை காணவில்லை என கண்ணீருடன் காவல் நிலையத்தில் கண்ணீர் மழுக புகார் – சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி உண்ணாமலை, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரமேஷ் பாபு மனைவியை பாட்டிலால் தாக்கியதால் மனைவி உண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ்பாபு மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில், இருந்து வெளியே வந்த ரமேஷ் பாபுக்கும் மனைவி உண்ணாமலைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரமேஷ்பாபுக்கும் உண்ணாமலைக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டு மனைவி உண்ணாமலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், உண்ணாமலையின் இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் கணிஷ் என்ற சிறுவன் தாயை காணவில்லை என்று குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

பின்னர் அங்கு இருந்த காவல்துறையினர் சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில் தாய்க்கு வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்பதும் அவரை கண்டுபிடித்து தரும்படி காவல்துறை இடம் கேட்டுக் கொண்டார். உடனடியாக சிறுவனை அழைத்துச் சென்று பாட்டியிடம் ஒப்படைத்தன.

பின்னர், உண்ணாமலையை கண்டுபிடித்து தருவதாகவும் விட்டு வெளியே வரும்போது பாட்டி உடன் வரவேண்டும் என்று சிறுவனுக்கு அறிவுரை கூறு போலீசார் பாட்டியிடம் பேரனை ஒப்படைத்து வந்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?