யார் பெரிய ரவுடி என்பதில் தகராறு… பிரபல ரவுடியை காட்டுக்குள் வைத்து கதையை முடித்த கும்பல் : திருப்பூரில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 8:46 am
Rowdy Murder - Updatenews360
Quick Share

திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு, ஜெய் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 30). பெயிண்டரான இவர் மீது, கொலை முயற்சி, அடி தடி, வழிப்பறி என, பத்துக்கும் மேற்பட்ட வழக்கு உள்ளன.

இவருக்கும், ராஜேஷ் என்பவருக்குமிடையே, ‘யார் பெரிய ரவுடி’ என்ற முன்விரோத மோதல் உள்ளன. இதன் காரணமாக, தினேஷ்குமாரை கொல்ல ராஜேஷ் திட்டமிட்டார்.

நேற்று இரவு, ராஜேஷ், தினேஷ்குமார் உட்பட, பத்து பேர் கொண்ட கும்பல் சந்திராபுரத்தில் உள்ள மதுக்கடையில் மது அருந்தினர். ராஜேஷ், தினேஷ்குமாரிடையே பிரச்னை எழுந்தது. உடன் வந்த நண்பர்கள், இருவரையும் சமாதனப்படுத்தினர்.

இதையடுத்து, முன்விரோதம் தொடர்பாக சமாதானப் பேச்சு நடத்தலாம் என கூறி, தினேஷ்குமாரை, கே.என்.பி., சுப்ரமணியம் நகருக்கு அழைத்து சென்றனர்.

காட்டுப்பகுதிக்குள் சென்ற போது, மீண்டும் இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. ராஜேஷ் உட்பட, பத்து பேரும் தினேஷ்குமாரின் கை, கால்களை அமுக்கி பிடித்து, கத்தியால் கழுத்தை அறுத்து கொன்று தப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து சென்ற நல்லுார் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இரு தனிப்படை அமைக்கப்பட்டு இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கொலை தொடர்பாக, அய்யம்பாளையம் மணிகண்டன், 28, சந்திராபுரம் கண்ணன், 25, வள்ளியம்மை நகர் தினேஷ், 26, மாஸ்கோ நகர் பாலாஜி சரவணன், 28, செட்டிபாளையம் தமிழரசன், 25, பாலகிருஷ்ணன், 25 என, ஆறு பேரை கைது செய்தனர்.

மூன்று டூவீலர், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவான, ராஜேஷ், ராம்குமார் உட்பட, நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீது கஞ்சா, கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்கு உள்ளன. ஜாமீனில் எடுக்க உதவி செய்யாதது தொடர்பாக தினேஷ்குமார், ராஜேஷிடம் முன்விரோதம் இருந்தது. ‘யார் பெரிய ரவுடி’ என்ற பிரச்னை முற்றி போய், தற்போது கொலையில் முடிந்தது.

ஆறு பேரில், பாலாஜி சரவணன், மணிகண்டன் மற்றும் தலைமறைவாக உள்ள ராம்குமார் ஆகியோர், கடந்த, 2022 திருப்பூர் எம்.பி., நகர் காட்டு பகுதியில் சதீஷ் என்ற வாலிபரை கொடூரமாக கொலை செய்து, தலையை துண்டித்த வழக்கு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Views: - 713

1

0