கார் ஓட்டுநரின் தலையில் கல்லை போட்டு கொலை.. கர்ப்பமான மனைவியை பார்த்து விட்டு வரும் போது நிகழ்ந்த சோகம் : 6 பேர் தலைமறைவு!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 6:49 pm

மதுரையில் மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை மாநகர் கரிமேடு பொன்னகரம் 1ஆவது தெரு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (24) என்ற இளைஞர் தனியார் கார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

ராஜபாண்டியின் மனைவி கர்ப்பமான நிலையில், அவரது தாயார் வீட்டில் தங்கி இருந்ததால், நேற்று மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு பொன்னகரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ராஜபாண்டி திரும்பியுள்ளார்.

இந்நிலையில் மதுரா கோட்ஸ் அருகே தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் ராஜபாண்டி நின்றுகொண்டிருந்த போது, அதே பகுதியில் நின்றுகொண்டிருந்த மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா மனோஜ் (22), மணிகண்டன், லோகேஷ்(20) தத்தனரியை சேர்ந்த கிருஷ்ணகுமார், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி , சிம்மக்கலை சேர்ந்த கண்ணன் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் ராஜபாண்டியிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

அப்போது, இரு தரப்பினருக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டுனர் ராஜபாண்டியை தாக்கி கீழே தள்ளிவிட்டு, அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். அங்கு அண்ணனை பார்க்க சென்ற ராஜபாண்டியின் தம்பி ஹரிஸ்பாண்டி கீழே கிடந்த ராஜபாண்டியை பார்த்தபோது சம்பவ இடத்திலயே தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.

இதனையடுத்து, ஹரிஸ்பாண்டி கரிமேடு காவல்நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா மனோஜ் (22), மணிகண்டன், லோகேஷ்(20) தத்தனரியை சேர்ந்த கிருஷ்ணகுமார், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி , சிம்மக்கலை சேர்ந்த கண்ணன் ஆகிய 6 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கரிமேடு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

  • santhosh narayanan shared the comic incident viral on internet சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?