அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆன சிசுவை விட்டுச் சென்ற தாய் ; விசாரணையில் பரபரப்பு திருப்பம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2023, 11:34 am
GH- Updatenews360
Quick Share

அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆனு சிசுவை விட்டுச் சென்ற தாய் ; விசாணையில் பரபரப்பு திருப்பம்!!

வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் உள்ள புற நோயாளிகள் பிரிவில் (20.9.2023) அன்று மாலை சுமார் மூன்று மணி அளவில் பிறந்து சுமார் 4 நாட்களே ஆன ஆண் குழந்தையின் அழுகுரல் கேட்ட பொதுமக்கள் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு அதன் தாயை தேடிய போது நீண்ட நேரம் ஆகியும் யாரும் கிடைக்காததால் இதுகுறித்து வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் குழந்தையை மீட்ட காவல்துறையினர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுக்க வந்ததாக கூறிய பெண்மணி தான் விருதம்பட்டை சேர்ந்தவர் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

பின்னர் குழந்தையை உறங்க வைத்துவிட்டு சென்றவர் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்ப வரவில்லை. மேலும் இவருக்கு அடுக்கம்பாறையில் தான் குழந்தை பிறந்ததாகவும் தெரிவித்ததாக அங்கு இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்தும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் வேலூர் தெற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

Views: - 163

0

0