கோவையில் இளைஞர் கொலையில் பரபரப்பு திருப்பம்.. குற்றவாளி மனைவியுடன் அடிக்கடி உல்லாசம் : விசாரணையில் பகீர்!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2024, 9:38 am

கோவையில் இளைஞர் கொலையில் பரபரப்பு திருப்பம்.. குற்றவாளி மனைவியுடன் அடிக்கடி உல்லாசம் : விசாரணையில் பகீர்!

கோவை துடியலூர் அருகே காசிநஞ்சே கவுண்டன் புதூர் பகுதியில் நேற்று அதிகாலை மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்ற 35 வயது மதிக்கத்தக்க கூலித் தொலிலாளியை மர்ப நபர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

துடியலூர் போலீசார் உடலைக் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதிகாலை நடந்த கொலையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது மகன் ஜெய்கணேஷ். 35 வயதான இவர் கோவை துடியலூர் அருகே சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை 6 மணியளவில் காசி நஞ்சேகவுண்டன் புதூர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் ஜெய்கணேசை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ஜெய்கணேஷ் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துடியலூர் போலீசார் ஜெய்கணேசின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், கோவை பன்னிமடையை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மனைவிக்கும், கொலை செய்யப்படட ஜெய்கணேஷ்க்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

பலமுறை சாமிநாதன் கண்டித்தும் கள்ளக்காதலை கைவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சாமிநாதன் சம்பவத்தன்று அதிகாலை நடந்து சென்ற ஜெய்கணேசை சரமாரியாக குத்திக் கொன்றது தெரியவந்தது. தலைமறைவான சாமிநாதனை போலீசார் தேடி வருகின்றனர்.

  • Muthu vs Soundariya Nanjundan பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவருதான்.. கோப்பையுடன் வெளியான போட்டோ!!