குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைந்த ஒற்றைக் காட்டு யானை.. மக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2023, 9:59 am
ele
Quick Share

குடியிருப்பு பகுதிகளில் தஞ்சமடைந்த ஒற்றைக் காட்டு யானை.. மக்கள் வெளியே வரவேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம், புல்லாக்காகவுண்டன் புதூர் பகுதியில் ஊருக்குள்ள புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை அருகே நரசிபுரம் மலைப்பகுதியில் இருந்து இரவு நேரங்களில் வரும் காட்டு யானைகள் மலையை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விளை நிலங்களில் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் நரசிபுரம் அடுத்த புல்லக்காகவுண்டன் புதூர் பகுதியில் இரவு 8 மணி அளவில் புகுந்த ஒற்றை காட்டி யானை அப்பகுதியில் உலா வந்துள்ளது. மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் யானை சுற்றி வந்ததால் பணிக்கு சென்று வீடு திரும்பியோர், கடைக்கு சென்றார் யானையை கண்டு ஓட்டம் பிடித்தனர்.

தகவல் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போளுவாம்பட்டி வனத்துறையினர் யானையை வனத்திற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் பொது மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் நீண்ட நேரம் போராடி யானையை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர்.

ஒற்றைக் காட்டி யானை ஊருக்குள் சுற்றி வரும் சிசிடிவி காட்சிகள் மற்றும் பொதுமக்களை விரட்டும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

Views: - 232

0

0