10 நாட்களாக ஊருக்குள் புகுந்து கதவுகளை தட்டும் காட்டு யானை.. அச்சத்தில் மக்கள் : ஷாக் சிசிடிவி காட்சி!

Author: Udayachandran RadhaKrishnan
13 March 2024, 7:00 pm
elephant--updatenews360
Quick Share

10 நாட்களாக ஊருக்குள் புகுந்து கதவுகளை தட்டும் காட்டு யானை.. அச்சத்தில் மக்கள் : ஷாக் சிசிடிவி காட்சி!

கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தண்ணீர் மற்றும் உணவுக்காக கோடை காலங்களில் மலை கிராம பகுதிகளுக்கு வரும் யானைகள், ஆதாரத்தை எடுத்துக் கொண்டு கடந்த அதிகாலை அடர் வனத்தை நோக்கி நடை கட்டும்.

இந்த நிலையிலே, கோடை காலத்துக்கு முன்னதாகவே வறட்சி ஆரம்பமான நிலையில் யானைகள் நீர், உணவுக்காக ஊர் பகுதிகளுக்கு படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

பத்து நாட்களுக்கு மேலாக ஒற்றைக் காட்டு யானை, மாலை நேரத்தில் ஏழு மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியே வந்து, எந்தவித அச்சுறுத்தும் இல்லாமல், அனைத்து வீடுகளிலும் உள்ள அரிசி பருப்புகளை சூறையாடுவதும், மாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள தவிடு, புண்ணாக்கு, மக்காச்சோளம் போன்றவைகளை தின்னும் சேதப்படுத்தி வருகிறது.

இந்த நிலையிலே, நேற்று இரவு கரடிமடை பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு பெண்மணிகளை தாக்கி அரிசியை சாப்பிட்டுள்ளது.

காயம் அடைந்த பெண்மணிகள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வனத்துறை தனிப்படை அமைத்து யானையை இடம்பெயர செய்ய வேண்டும் என்ற விவசாயி சார்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட குழுவினர் கோரிக்கை தெரிவித்தனர் . பெண்களை காயப்படுத்திய யானை காட்சி வெளியாகியிருக்கின்றன.

Views: - 160

0

0