அமைச்சர் பொன்முடியை சிக்க வைத்தது பாஜக அல்ல…. தமிழக அரசு தான் ; ஏசி சண்முகம் கொடுத்த விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
22 December 2023, 9:07 pm
Quick Share

மிக் ஜாம் புயல் குறித்து வானிலை மையம் தெளிவாக அறிவித்த நிலையில், தமிழக அரசு மக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திருக்க வேண்டும் என்று புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் வேலூர் ஓல்டு டவுன் பகுதியில் ஏ.சி.எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் புதிய நீதிக்கட்சியின் சார்பில் மருத்துவ முகாமானது நடந்தது. இதில் திரளான மக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு கண் பரிசோதனை, காது, மூக்கு, தொண்டை பரிசோதனை, எலும்பு, பல் மற்றும் பொது மருத்துவத்திற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு கண் கண்ணாடிகளையும், மருந்து மாத்திரைகளையும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் வழங்கினார்.

பின்னர் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது :- மக்கள் பயன்பெறும் வகையில் வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. நாளை முதல் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துகிறோம். வேலை வாய்ப்பு முகாமில் 120க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. ஆறு தொகுதியிலும் உள்ள படித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வேண்டும், எனக் கூறினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “பொன்முடி வழக்கில் மத்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்யவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு பாஜகவால் தொடரப்பட்ட வழக்கு அல்ல, பழிவாங்கும் படலமும் அல்ல.

தமிழகத்தில் இருக்கின்ற மின் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை அழைத்திருக்க வேண்டும். மிக்ஜாம் புயல் முதன் முதலில் சென்னை தாக்கும் என அறிவித்தார்கள். இரண்டாம் முறை அறிவித்த போது, ஆந்திரா செல்லும் என அறிவித்தார்கள். ஆகவே முன்னேற்பாடுகளை செய்ய திமுக ஆட்சி தவறியது.

வானிலை மையம் தெளிவாக அறிவித்து வந்தது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தென் மாநிலங்களிலும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இயற்கை பேரிடரில் இயற்கையாக மழை தடுக்க முடியாது. ஆனால் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மக்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். மத்திய அரசும் வெள்ளத்தில் சிக்கிய மக்களை ராணுவம் மூலம் மீட்டு வருகிறது. ஹெலிகாப்டரில் உணவு பொட்டலங்களும் மக்களுக்கு அளிக்கபடுகிறது, என கூறினார்,

Views: - 691

0

0