‘No Guts No Glory’… தெறிக்கவிடும் நடிகர் அஜித்குமாரின் ‘துணிவு’ படத்தின் First Look..!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 6:53 pm

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த ‘வலிமை’ திரைப்படம் செம ஹிட் ஆனது. இருப்பினும், அதிக நேரம் பைக் ரேஸ் காட்சிகளிவெளியானது. அதிக பைக் ரேஸ் காட்சிகளைக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் நேர்மறை விமர்சனங்களைப் பெற்றது.

இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித்தின் AK61 படம், போனி கபூர் தயாரிப்பிலும், எச்.வினோத் இயக்கத்திலும் தயாராகி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்படத்திற்காக அவர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘ஏகே 61’ படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஆல் இந்தியா பைக் ட்ரிப் சென்ற அஜித் குமாருடன், AK61 பட கதாநாயகி மஞ்சு வாரியரும் சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின. இதற்கிடையே ஏகே61 படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே, அந்தப் படத்துக்கு ‘துணிவே துணை’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக இணையதளங்களில் தகவல்கள் பரவின.

இந்த நிலையில், நடிகர் அஜித் நடிக்கும் ‘AK61’ படத்திற்கு ‘துணிவு’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதோடு, துணை தலைப்பாக, ‘No Guts No Glory’ என்பதுடன் துப்பாக்கியை கையில் வைத்துருப்பது போன்ற First Look-ம் வெளியாகியுள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!