‘நீ பெட்டிசன் கைலதான எழுதுற’… மணல் கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல்..!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 7:12 pm
Quick Share

மணல் கொள்ளை தொடர்பாக போலீஸில் புகார் அளித்த சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.

பெரிய பாளையம் அடுத்துள்ள மண்வாசல் பகுதியில் உள்ள மணல் குவாரியில், விதிகளை மீறி சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக முதல்வரின் தனிப்பிரிவிற்கும், காவல்துறைக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட கல்குவாரி மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மணல் குவாரியின் ஆதரவாளரான நடராஜ் என்பவர் சமூக ஆர்வலர் நாகராஜை தொலைபேசியில் அழைத்து மிரட்டிய ஆடியோ வெளியானது.

அந்த ஆடியோ பதிவில், “நா வந்ததுக்கு அப்புறம் பாரு. உயிர் போச்சுனா ஈசியா செத்துருவ நீ. பெட்டிசன் கைலதான எழுதுற. நீ பாரு. நீ மட்டும் பேக் வாங்குனா உன்ன கொண்ணே புடுவேன். தெரியாம பண்ணிட்டேன். இனிமே பண்ண மாட்டேன் அப்படினு சொல்லி வாங்குன. இப்போ நீ எல்லாத்துக்கும் துணிஞ்சு பேசிட்ட. அதே மாதிரி இருக்கனும்”, என சமூக ஆர்வலர் நாகராஜை நடராஜ் மிரட்டியுள்ளார்.

இந்த ஆடியோ வெளியான நிலையில், அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Views: - 289

0

0