படர்தாமரை உடலுக்கு கேடு… பிஜேபியின் தாமரை நாட்டுக்கே கேடு ; நடிகர் கருணாஸ் விமர்சனம்..!!!

Author: Babu Lakshmanan
15 April 2024, 1:39 pm

படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டுக்கே கேடு என்று நிலக்கோட்டையில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் விமர்சித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியில் திண்டுக்கல் பாராளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் நடிகர் கருணாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: ஆட்டுக்குட்டிக்கு என்று ஒரு மரியாதை இருக்கு.. அண்ணாமலைக்கு இருப்பது களிமண்ணா..? சினேகன் ஆவேசம்!

பள்ளபட்டி, அணைப்பட்டி, விறுவீடு பகுதிகளில் நடிகர் கருணாஸ் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என இந்திய மக்களிடையே மோடி பிரிவினையை ஏற்படுத்த நினைக்கிறார். வாய்ப்பில்ல ராஜா ஒருபோதும் வாய்ப்பில்லை என தனது பாணியில் பேசினார்.

படர்தாமரை உடலுக்கு கேடு, ஆகாயத்தாமரை குளத்திற்கு கேடு, பிஜேபியின் தாமரை இந்திய நாட்டிற்கே கேடு என்றும், எனவே பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வர ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்று பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், “உலகில் பொய் சொல்கிறவர்களில் போட்டி வைத்தால் முதல் இடத்தில் மோடியும், இரண்டாவது இடத்தில் அண்ணாமலையின் இருப்பார்கள். இவர்கள் வாயால் சுட்ட வடைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை என குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தல் பிரச்சார நிகழ்வில் நிலக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வத்தலக்குண்டு தெற்கு ஒன்றிய செயலாளர் கனிக்குமார் மற்றும் தோழமைக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?