ஆட்டுக்குட்டிக்கு என்று ஒரு மரியாதை இருக்கு.. அண்ணாமலைக்கு இருப்பது களிமண்ணா..? சினேகன் ஆவேசம்!

Author: Babu Lakshmanan
15 April 2024, 1:06 pm
Quick Share

இனிமேல் ஆட்டுக்குட்டி அண்ணாமலை என அழைத்து ஆட்டுக்குட்டியை அசிங்கப்படுத்த வேண்டாம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பாடலாசிரியர் சினேகன் ஆவேசமாக பேசியுள்ளார்.

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

கமல்ஹாசன் வருவதற்கு முன்னதாக பொதுமக்களிடையே பேசிய பாடலாசிரியர் சினேகன் அண்ணாமலை குறித்து பேசத் தொடங்கியதும் “ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி” என தொண்டர்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

மேலும் படிக்க: மீண்டும் பாஜக வெற்றி பெற்றால் சர்வாதிகார ஆட்சிதான் ; திமுக வேட்பாளர் கனிமொழி குற்றச்சாட்டு..!!

அப்போது, பாடலாசிரியர் சினேகன் தயவு செய்து, இனி ஆட்டுக்குட்டி அண்ணாமலை என பாஜக தலைவர் அண்ணாமலையை அழைக்க வேண்டாம் எனவும், ஆட்டுக்குட்டிக்கு ஒரு மரியாதை இருக்கு, அதை கெடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், பச்சை இலையை போட்டால் பண்போடு பின்னால் வரும் எனவும், ஆட்டுக்குட்டி உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணாது எனவும், குட்டிகளுக்கு சரியாக பால் கொடுக்கும் எனவும், யார் எஜமான் என்பது ஆட்டுக்குட்டிக்கு தெரியும் என்றும் கூறினார்.

மேலும், ஆட்டுக்குட்டி அடுத்தவர்களின் வீட்டை தாவி பார்க்காது எனவும், அடுத்தவர்களை போட்டுக் கொடுக்காது எனவும், ஆகையினால் இன்று முதல் அண்ணன் அண்ணாமலை அவர்களை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என சொல்வதை நாங்கள் விட்டுவிடுகிறோம் எனவும் ஆட்டுக்குட்டி மீது எங்களுக்கு பெரிய மதிப்பு உண்டு எனவும் பேசினார்.

தனிமனித விமர்சனம் என்பது அரசியலில் இருக்கக் கூடாது என்று எங்கள் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் சொல்லி இருக்கிறார் எனவும், நான்கு நாட்களுக்கு முன்பு அண்ணாமலை அவர்கள் எங்கள் தலைவர் கமல்ஹாசனுக்கு மூளை இருக்கிறதா என பரிசோதனை செய்யுமாறு விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் படிக்க: ‘மைக், லைட் ஆஃப் பண்ணியாச்சு’.. நள்ளிரவில் அண்ணாமலை வாக்குவாதம்… சூலூர் போலீசார் வழக்குப்பதிவு!

ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலோ, அந்த பொருள் மீது ஆசை இருந்தால் தான் அது குறித்து தொடர்ச்சியாக நாம் பேசுவோம். உங்களுக்கு மூளை இல்லை என்பதற்காக எங்கள் தலைவரைப் பற்றி சொன்னீர்களா?, அல்லது நீங்கள் படித்த 20 ஆயிரம் புத்தகத்தில் மூளை குறித்து ஒரு புத்தகம் கூட இல்லையா?

மூளையைப் பற்றி பேச மூளை இருக்க வேண்டும் இல்லையா?.. யார் யாரைப் பற்றி பேச வேண்டும் என்பதற்கு ஒரு அருகதை வேண்டாமா?. அண்ணாமலை அவர்கள் சில நாட்களுக்கு முன்பு கோவையில் வெப்பம் அதிகரிக்க திமுக தான் காரணம் என பேசி உள்ளார். அண்ணாமலையின் மூளையை பார்த்து நாங்கள் வியந்து போகிறோம்..

அரசியல் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, பண்பாட்டுக்கு கட்டுப்பட்டு நியாயமான முறையில் நாங்கள் விமர்சனம் செய்கிறோம். இன்னொரு முறை எங்கள் தலைவரைப் பற்றியோ, வேறு யாரைப் பற்றியோ தரைக்குறைவாக விமர்சனம் செய்தீர்கள் என்றால், நாங்கள் என்ன விமர்சனம் செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். அண்ணாமலை அவர்களே நீங்கள் மூளை இல்லை என சொன்ன தலைமுறைதான் உலகநாயகன் என கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மண்ணில் 20 வருடங்கள் கழித்து கலை இலக்கிய பண்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே யோசிக்கின்ற மிகப்பெரிய ஆற்றல் உடைய தலைவர் எங்கள் தலைவர். யாரைப் பார்த்து மூளை இல்லை என கேட்கிறாய்?.. முதலில் உங்களுக்கு மூளை உள்ளதா என சோதித்துப் பாருங்கள் உங்களுக்கு இருப்பது மூளையா அல்லது களிமண்ணா என்பது தெரியும்.

பாஜகவின் வரலாறு தெரியாமல் யோசித்துப் பார்க்காமல் அண்ணாமலை காக்கிச்சட்டையை கழட்டி போட்டுள்ளார் எனவும், இன்னும் காக்கி சட்டை போட்ட எண்ணத்திலேயே செயல்படுகிறார் எனவும் ஆவேசமாக பேசினார்.

Views: - 107

0

0