இது வக்கிரப்புத்தி… திருமாவளவன் செய்தது இதுதான்…? சர்ச்சையான வீடியோ குறித்து நடிகை அகிலா கொடுத்த விளக்கம்!!

Author: Babu Lakshmanan
15 December 2023, 4:30 pm
Quick Share

சென்னை; விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன் மேடையில் பேசும் வீடியோ ஒன்று வைரலானது குறித்து சீரியல் நடிகை அகிலா விளக்கம் அளித்துள்ளார்.

அண்மையில் சமூகவலைதளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் வீடியோ ஒன்று வைரலானது. தனியார் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியின் மேடையில் சீரியல் நடிகை அகிலா பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் அருகே நின்று கொண்டு திருமாவளவன் அவரை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் டிரெண்டாக்கி சர்ச்சையாக்கினர். இந்த நிலையில், இந்த வீடியோவின் உண்மை நிலை குறித்து நடிகை அகிலா விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :- தனியார் மருத்துவமனை நிகழ்ச்சிக்கு நான் சென்று இருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்தவர் தோழர் அண்ணன் தொல் திருமாவளவன். அந்த நிகழ்ச்சியில் நான் அவருக்கு வரவேற்பு உரை கொடுத்தேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி பற்றி கூறி அவருக்கு அழைப்பு விடுத்தேன் .

அவர் சிறப்பு விருந்தினர். சிறப்பு விருந்தினர் அமர்ந்து இருக்க வேண்டும். நான் நின்றபடி அழைக்க வேண்டும் என்பதே விதி. ஆனால் அங்கே கூட்டமாக இருந்தது. திருமா அண்ணன் உடனே பேச வேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் பேச வேண்டும் என்று தொண்டர்கள் காத்துகொண்டு இருந்தனர். அதற்காக நானும் அப்படியே கூப்பிட்டுவிட முடியாது. திருமா அடுத்து பேசுவார் என்று நான் சொல்லிவிட முடியாது. அவர் சமத்துவத்திற்காக, சமூக நீதிக்காக போராடும் நபர்.

மக்களுக்காக குரல் கொடுக்கும் மாமனிதர். இப்போது அவர் லோக்சபா எம்பியாகவும் இருக்கிறார். அதனால் அவருக்கு நீண்ட இன்ட்ரோ கொடுத்து அழைத்தேன். அவரை பற்றி நான் நீண்ட நேரம் பேசியதை .. வியந்தபடி திருமா பார்த்துக்கொண்டு இருந்தார். ஆனால் அதை போய் வேறு விதமாக மாற்றி.. களங்கப்படுத்தும் விதமாக பேசுகிறார். அதை பார்க்கும் போது மனசு கஷ்டமாக இருக்கிறது. வக்கிரபுத்தி: இந்த மாதிரி விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஒருவரை களங்கப்படுத்தும் விதமாக பேச கூடாது. அவர் பல நல்ல விஷயங்களை செய்துள்ளார். ஆனால் இவர்கள் செய்யும் போஸ்ட் களங்கப்படுத்தும் விதமாக உள்ளது.

பல நல்ல காரியங்களை செய்தவர்களை பற்றி பாசிட்டிவாக.. அவர்கள் செய்த நல்ல விஷயங்கள் பற்றி பேச வேண்டும். நல்ல விஷயங்களை பேசாமல் இப்படி வக்கிரத்தோடு பேச கூடாது. என்னுடைய உடை கலர்.. என் பேச்சை வைத்து நான் விசிகவில் சேர்ந்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். நான் அரசியலில் இல்லை. நான் சாதாரண ஆள். நான் எந்த காட்சியிலும் இணையவில்லை. எனக்கும் எந்த கட்சிக்கும் தொடர்பு கிடையாது. அந்த மருத்துவமனை நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டோம் எவ்வளவோ. உங்களுடைய அரசியல் காழ்புணர்ச்சிக்காக ஒரு பெரிய அரசியல் தலைவர் நீங்கள் களங்கப்படுத்துகிறீர்கள்.

ஒரு ஆணை களங்கப்படுத்துகிறீர்கள் என்பதற்காக கூடவே அங்கே உள்ள ஒரு பெண்ணையும்.. அவரின் மாண்பையும் களங்கப்படுத்துகிறீர்கள். அது பெரிய தவறு. அப்படி செய்ய கூடாது. அப்படி பேசுவது பெரிய தவறான விஷயம். இதை எல்லாம் செய்யாதீர்கள். இப்படி செய்வதால் ஒரு மனிதரையும்.. கூட நிற்கும் பெண்ணையும் நீங்கள் அசிங்கப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் உங்களுடைய வக்கிர புத்தியை இது காட்டுகிறது. ஒரு நபரை நீங்கள் கொள்கை ரீதியாக எதிர்க்க முடியவில்லை என்றால்.. இப்படி அசிங்கம் செய்வீர்களா? உங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையும் நீங்கள் அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம், என தெரிவித்துள்ளார்.

Views: - 348

0

0