கரூர் ஃபார்முலாவை கையில் எடுத்த திமுக… தேர்தல் நெருங்க நெருங்க மனிதப்பட்டி தயார் : தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்..!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 11:55 am

மனிதனை அடைத்து அவர்களுக்கு தேவையான உணவு, பொருட்களை கொடுத்து வாக்கு வாங்கி விடலாம் என திமுகவினர் நினைப்பதாக கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

கரூர் புகலூர் பகுதியில் அமைந்துள்ள காகித தொழிற்சாலை விருந்தினர் மாளிகையில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் காவல்துறை பொது பார்வையாளர், வரவு செலவு பார்வையாளர் அவர்களிடம் புகார் மனு அளித்தார்.

மேலும் படிக்க: திமுக ஆட்சியை அகற்ற வேண்டும்… எதிர்வரும் ஆட்சி பெண்களுக்கான ஆட்சி ; பிரேமலதா வாக்குசேகரிப்பு

முன்னாள் அமைச்சரும்,கரூர் மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் புகார் மனு அளித்தார். அதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கரூர் மாவட்ட காவல்துறை. கரூர் மாவட்ட நிர்வாகம் ஒருதலை பட்சமாக நடந்து கொள்வதாக தேர்தல் பொது பார்வையாளர், தேர்தல் காவல்துறை பொது பார்வையாளர், வரவு செலவு பார்வையாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

கரூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறார்கள். அண்ணா திமுகவினருக்கு ஒரு சட்டம், காங்கிரஸ் – திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஒரு சட்டம் போல நடவடிக்கை எடுக்கிறார்கள். அனுமதி வாங்கிக்கொண்டு கட்சி கொடி கட்டினால், காவல்துறையினர் அதனை பிடுங்கி காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

எல்லா விதத்திலும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்கிறார்கள். நேற்று ஒரே இடத்தில் திமுகவினர், அதிமுகவினர் பிரச்சாரத்தை துவங்கிய நிலையில், அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது, நானும், வேட்பாளரும் பிரச்சாரத்தில் பேசும்பொழுது, குண்டர்கள் 10 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்தனர். இதில் ஒருவர் மீது மோதி காயம் ஏற்பட்டது.

காவல்துறை அந்த இடத்தில் இல்லை. இரண்டாவது இடத்தில் இதே போன்று பிரச்சாரம் செய்யும் பொழுது, காவல் ஆய்வாளர் புகார் கூறிய பொழுது,  இது பற்றி அறிக்கை தருமாறு கேட்கிறார். பிரச்சனைக்குரிய இடத்தில் ஒரே நேரத்தில் இரு கட்சியினருக்கு பிரச்சார அனுமதி கொடுத்தது தவறு. இந்த அனுமதியால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சினையை சமாளிக்க காவல் துறை யாருமில்லை. ஒரே ஒரு காவலர் மட்டும் இருந்துள்ளார்.

மணல் மாஃபியா கும்பல்கள் தொடர்ந்து அதிமுகவினர் மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்தில் இருந்துள்ளனர். கரூர் தொகுதியில் ஐந்து இடங்களில் மேட்டுப்பாளையம், மல்லம்பாளையம், வாங்கல், நெரூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் திருட்டுத்தனமாக மணல் அள்ளுகின்றனர். அது குறித்து புகார் அளிக்கப்படும்.

மேலும் படிக்க: திருமாவளவன் தங்கியிருந்து வீட்டில் ஐடி ரெய்டு… நேரில் ஆஜராகுமாறு சம்மன் கொடுத்ததால் பரபரப்பு..!!!

இரவு 10 மணிக்கு மேல் விடிய விடிய திருட்டுத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்து, அதன் மூலமாக கிடைக்கும் பணத்தை கரூர் ஒன்றிய பகுதிகளில் தேர்தல் செலவுக்காக பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இரண்டு முறை புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக மனுவும் அளித்துள்ளோம். அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திருட்டு மணல் அள்ளுவதற்கு உடந்தையாக செயல்படும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியிருந்தார். ஆனால் அந்த காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள் துணை போகின்றனர்.

சாலையை மறித்து பிரச்சாரம் செய்யவில்லை. ஆனால், அதிமுக வேட்பாளர் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யாமல் அவர்கள் கூட இருந்த நான்கு பேர் மட்டும் பேரளவில் வழக்கு பதிந்துள்ளனர். இது வெறும் கண்துடைப்பு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்ட போது, கரூர் கோவை இருபுற சாலைகளிலும் மறித்து பிரச்சார மேற்கொண்டனர். அதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஒரு தலைப்பட்சமாக நடப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த மாவட்ட நிர்வாகம் காவல்துறை வைத்து தேர்தல் நடத்தினால் முறையாக தேர்தல் நடைபெறாது. எனவே, இவர்களை மாற்ற வேண்டும்

2021 தேர்தல் கரூர் பார்முலா, ஈரோடு பார்முலா இடைத்தேர்தலில் ரகசியமாம் மனிதப்பட்டி தயாராகி உள்ளது. ஆடு அடைப்பதற்கு பட்டி என்று சொல்வார்கள். அதே போல மனிதனை அடைத்து வைப்பதற்கு பட்டி தயாராகி வருகிறது. அது தொடர்பாகவும் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. மனிதனை அடைத்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து வாக்கு வாங்கி விடலாம் என திமுகவினர் நினைக்கிறார்கள்.

இது ஜனநாயகமா..? ஆறு தொகுதியில் கரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வாங்க கூடாது என திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக தலைமை தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்படும் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும், என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!