தனது குடும்பத்திற்காகவே ஆட்சி செய்கிறார் CM ஸ்டாலின்.. வைத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
5 April 2022, 3:48 pm

நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை திமுக அரசு உயர்த்தியுள்ளது என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார்.

தஞ்சாவூரில் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, சொத்து வரி உயர்வை திரும்பப் பெறவேண்டும், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக கட்சியினர் ஈடுபட்டனர்.

முன்னதாகப் பேசிய வைத்திலிங்கம், நாடாளுமன்றத் தேர்தல் வர இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. மக்கள் மறந்து விடலாம் என்று சொத்து வரியை 150 சதவீதமாக திமுக அரசு உயர்த்தியுள்ளது. அவர்களுடைய குடும்பத்திற்காக இந்த ஆட்சி நடக்கிறது. மக்களுக்காக இந்த ஆட்சி நடக்கவில்லை, எனக் கூறினார். இதில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?