‘வெற்றிக் கொடிகட்டு’ பட பாணியில் மோசடி : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம்… பல லட்சத்தை ஏப்பம் விட்ட நபர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2022, 6:12 pm
Tirupur Police Arrest Fraud - Updatenews360
Quick Share

திருப்பூர் : வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏஜி பாபுவிடம் ஜீவராஜ் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் இணையதளத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமாக விளம்பரத்தை பார்த்து அதிலிருந்து நம்பருக்கு தொடர்பு கொண்டபோது கண்ணன் என்பவர் பேசியதாகவும் அவர் கனடாவில் உள்ள சாக்லெட் கம்பெனியில் வேலை வாங்கித் தருவதாகவும் பத்து லட்சம் ஆகும் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஜீவராஜ் இவ்வளவு பணம் இல்லை எனக் கூறி மறுத்துள்ளார். ஆனால் கண்ணன் என்பவர் மீண்டும் ஜீவராஜை தொடர்பு கொண்டு தவணை முறையில் பணம் செலுத்தலாம் எனவும் வேலை கிடைத்தவுடன் முழு பணத்தையும் செலுத்தலாம் என கூறியுள்ளார்.

இதை நம்பி இதுவரை 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை பணமாகவும் வங்கிப் பரிவர்த்தனை மூலமாகவும் கொடுத்துள்ளார். ஆனால் பணம் கொடுத்து பல நாட்கள் ஆகியும் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் காலம் தாழ்த்தியுள்ளார்.

இதையடுத்து கண்ணனை பற்றி விசாரிக்கும்போது அவர் தன்னைப் போலவே பிறரையும் ஏமாற்றி இருப்பது தெரிய வந்ததாகவும் எனவே உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார் .

இதன் பேரில் வழக்கு பதிவு செய்த திருப்பூர் மாநகர காவல் துறையினர் தனிப்படை அமைத்து ஜீவராஜ் பணம் அனுப்பிய வங்கி கணக்கு விவரங்களை ஆய்வு மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட கண்ணன் என்பவரை கைது செய்தனர் .

ஜீவராஜனை ஏமாற்றியது போல வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் கண்ணன் ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது உடனடியாக கண்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 830

0

0