மீண்டும் மயிலாடுதுறைக்கு U-TURN… வனத்துறைக்கு போக்கு காட்டிய சிறுத்தை ; நள்ளிரவில் இளைஞர்களுக்கு ஷாக்..!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 10:11 am

வனத்துறையினர் சிறுத்தையை தஞ்சை மாவட்டத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர் பகுதியில் கடந்த 2 ஆம் தேதி சிறுத்தை ஒன்று புகுந்தது. இதனை மூன்றாம் தேதி காலையிலிருந்து வனத்துறையினர் காவல் துறையினர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். நகர்ப்புறத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இடம்பெயர்ந்த சிறுத்தை, காவிரி, பழங்காவிரி, மஞ்சள் ஆறு ஆகிய பகுதிகளில் சுற்றி திரிந்தது.

மேலும் படிக்க: ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

இதனை பிடிக்க கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமரா பொருத்தியும் வனத்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சி வாய் பகுதிக்கு சிறுத்தை இடம்பெயர்ந்தது. நேற்று சிறுத்தையின் கால் தடம் மற்றும் எச்சங்கள் நண்டல ஆற்றின் கரைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் பொருத்தப்பட்டிருந்த கூண்டுகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை காஞ்சி வாய், கருப்பூர், பேராவூர் ஆகிய பகுதிகளில் நண்டலாறு மற்றும் மஞ்சுளா ஆற்றின் கரை பகுதியில் அமைத்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், இன்று கூண்டுகளில் சிறுத்தை சிக்காத நிலையில், கண்காணிப்பு கேமராக்களில் சிறுத்தையின் உருவம் பதிவாகாத நிலையில், தேடுதல் வேட்டையின் அடுத்த கட்டமாக தஞ்சை மாவட்டத்தின் நண்டலார் பகுதியில் இரண்டு கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: ரூ.3000 கோடியில் படேல் சிலை… வெள்ள நிவாரண நிதியை வழங்க தயக்கம் ஏன்..? பாஜகவுக்கு அமைச்சர் எ.வ. வேலு கேள்வி

சிறுத்தை மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் நண்டலாறு வீரசோழன் ஆற்று பகுதிகளில் இருக்கலாம் என்று வனத்துறையினர் தேடி வந்த நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை அடுத்த புறநகர் பகுதியான அடியமங்கலம் ரயில்வே லைனில், செயல்படும் ஜல்லி கலவை தயார் செய்யும் தனியாருக்கு சொந்தமான இடத்தில் வேலை செய்யும் இளைஞர்கள், சாப்பிட்டுவிட்டு அமர்ந்துள்ளனர்.

அப்போது, அங்கிருந்த ஒரு தூங்கு மூஞ்சி மரத்தில் உட்கார்ந்து இருந்த சிறுத்தை, மரக்கிளை முறிந்து தாவி குதித்து அருகில் உள்ள காட்டுப்பகுதிக்குள் நுழைந்ததை பார்த்துள்ளனர்.

தொடர்ந்து வனத்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, இரவில் படம்பிடிக்கும் தெர்மல் ட்ரோன் மூலமாக அப்பகுதியில் இரவு நேரத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட இடத்தில் சிறுத்தையின் கால் தடம் போன்று பதிவுகள் காணப்படும் நிலையில், காலையில் மீண்டும் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் வனத்துறை ஈடுபட உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தை விட்டு சிறுத்தை சென்று விட்டதாக பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் யு டர்ன் அடித்து மயிலாடுதுறைக்கு சிறுத்தை திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!