ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 8:44 am
Quick Share

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காத மோடியின் ஆட்சியை தூக்கியெறிவோம் என்று தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி நேற்று கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பு பொதுமக்களிடம் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

பிரச்சாரத்தின் போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர் மன்ற தலைவரும், நகரச் செயலாளருமான கருணாநிதி இந்தியா கூட்டணி சார்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி கருணாநிதி கூறியதாவது :- கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு பெற்றுத் தந்துள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஊக்குவிக்க கடலை மிட்டாய்க்கான தொழிற் பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார்.

மேலும் படிக்க: ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்களுக்கு சிறப்பு முகாம் அமைத்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு பாஜக. நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு கண்துடைப்புக்காகக் கொண்டு வந்துள்ளனர்.

சட்டப்பூர்வமாக ஊழல் செய்த கட்சி பாஜக, தேர்தல் பத்திரம் என்ற பெயரில் ஊழல் செய்துள்ளது. பெரிய நிறுவனங்கள் மீது ரெய்டு, வழக்குப் போட்டு அவர்களிடம் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் பணம் வாங்கிக் கொண்டது பாஜக.

மிரட்டி வாங்குற காசுக்கும் – மிரட்டி வாங்குற பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா? தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல். அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் பாஜக அரசு மீது கொட்டியது. இவ்வளவு பெரிய ஊழல் செய்து விட்டு மற்றவர்களைப் பற்றி பாஜக பேசுகிறது.

காலை உணவு போலப் புதுமையான திட்டங்களை திமுக அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை ஆகியவற்றை ஒன்றிய அரசு தான் இறக்க வேண்டும் – நரேந்திர மோடியை ஆட்சியிலிருந்து இறக்கிவிடுவோம். வெயில் அடிக்கு என்று வீட்டிலிருந்து விட வேண்டாம்,ஓட்டு போட்டு விடுங்கள் என்று பேசினார்.

Views: - 241

0

0