ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
10 April 2024, 9:02 pm
Kanchi
Quick Share

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 624 வது நாளாக இவர்களது இரவு நேர அறவழிப் போராட்டம் தொடரும் நிலையில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

தபால் வாக்கு பெறுவதற்காக அதிகாரிகள் வயதானவர்களிடம் சென்று வாக்களிக்க கூறினார். வயதானவர்கள் யாரும் வாக்களிக்க தயாராக இல்லை என கூறி அதிகாரிகளை திருப்பி அனுப்பியதால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்.

இதைக் கண்டு மாவட்ட நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 146

0

0