‘ஹிஜாப்’ அணிந்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்: கோவையில் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்..!!

Author: Rajesh
10 February 2022, 2:55 pm
Quick Share

கோவை: கோவை மாநகராட்சி 78வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் ஹிஜாப் அணிந்து வாக்கு சேகரித்து கவனம் ஈர்த்துள்ளார்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பல்வேறு வகைகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி செல்வபுரம் 78 ஆவது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடும் கோமதி காட்டுதுரை என்ற பெண் வேட்பாளர் தனது வார்டில் ஹிஜாப் அணிந்து வாக்கு சேகரித்தார்.

அப்போது ஹிஜாப் அணிந்து குடியிருப்பு மற்றும் கடை தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கு சென்று இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். இது குறித்து அவர் கூறுகையில், எனது வார்டில் பெரும்பாலும் இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். தற்போது கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் நாங்கள் எப்போதும் ஒற்றுமையாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

Views: - 693

0

0