கோவைக்கு மட்டும் எந்த திட்டத்தையும் செய்யல : திமுக அரசை கண்டித்து அதிமுக உண்ணாவிரத போராட்டம்.. எஸ்பி வேலுமணி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 November 2022, 3:09 pm
SP Velumani - Updatenews360
Quick Share

கோவை : திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி வேலுமணி தலைமையில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்ட அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து வருகின்ற 2ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைக்க உள்ளதாகும். குறிப்பாக கோவையில் உள்ள அனைத்து சாலைகளும் பழுதடைந்து மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அதிமுக திட்டங்கள் செயல்படாமல் உள்ளது அத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் ஒன்றரை ஆண்டுகளில் கோவைக்கு முதலமைச்சர் எந்த திட்டத்தையும் செய்யவில்லை.

கேட்ட திட்டங்களை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்தார்.
அத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தவில்லை. பத்து ஆண்டுகளில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை தந்துள்ளோம். அதிமுக ஆட்சியில் கோவையில் உள்ள முக்கிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது.

பல மேம்பாலங்கள் கட்டினோம். கோவைக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம். ஒன்றரை ஆண்டுகளில் ஏதாவது செய்துள்ளார்களா என்ற கேள்வியை எழுப்பினார்.

மேலும் கோவை மாவட்ட மக்களை புறக்கணிக்காதீர்கள். கொசு மருந்து அடிக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் மருந்து இல்லை. வரி உயர்வால் மக்கள் அவதிப்படுகிறார்கள். மக்களுக்காக தான் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தார்.

உளவுத்துறை செயல்படவில்லை. காவல்துறை செயலிழந்து விட்டதாகவும் ஆளுநர் எந்த கட்சியையும் சாராதவர் எனவும் முதலமைச்சர் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Views: - 391

0

0