பொதுமக்களின் தாகத்தை தீர்க்க அதிமுக சார்பாக நீர்மோர் பந்தல் : கோவையில் துவக்கி வைத்த Er.R.சந்திரசேகர், கவுன்சிலர் ஷர்மிளா!!

Author: Udayachandran RadhaKrishnan
18 ஏப்ரல் 2023, 7:40 மணி
Sharmila - Udpatenews360
Quick Share

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடை காலத்தை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் ஆங்காங்கே பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தலை திறக்க ஆணையிட்டிருந்தார்.

இதையடுத்து எதிர்க்கட்சி சட்டமன்ற கொறடா எஸ்பி வேலுமணி அவர்களின் ஆலோசனைப்படி, கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் முன்னிலையில் கோடை வெயிலில் தவிக்கும் பொதுமக்களின் தாகத்தை போக்கும் வகையில், கோவை புறநகர் தெற்கு மாவட்டம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் Er.R.சந்திரசேகர் அவர்கள் மற்றும் 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் Dr.ஷர்மிளா_சந்திரசேகர் அவர்கள் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் பழச்சாறு உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

  • Vijay TVK அவசர அழைப்பு விடுத்த தவெக.. விஜய் முக்கிய ஆலோசனை.. பரபரக்கும் களம்!
  • Views: - 358

    0

    0