காதை கிழித்த ஏர்ஹாரன் சத்தம்… அரசு பேருந்து ஓட்டுநர்களை அலறவிட்ட போக்குவரத்து போலீசார்…!!!

Author: Babu Lakshmanan
25 May 2024, 11:36 am
Quick Share

திருச்சியில் ஏர்ஹாரன்களை பயன்படுத்தி வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

சமீப காலத்தில் திருச்சி மாநகரத்தில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்படுவதாகவும், அதிக சத்தம் எழுப்பும் இந்த ஹாரன்கள் வாகன ஓட்டிகளை பீதிக்கு உள்ளாக்குவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

மேலும் படிக்க: சமூகம் தான் மதிப்பெண்களை தீர்மானிக்கிறதோ?… TNPSC-யில் நேர்முகத் தேர்வு முறையை ரத்து செய்க : ராமதாஸ் வலியுறுத்தல்

இதனையடுத்து திருச்சி ஸ்ரீரங்கம், கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட சத்திரம் பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், பிரபாகரன், அருண்குமார், முகமது மீரான் செந்தில் ஆகியோர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை சுற்றுச்சூழல் அறிஞர் (Environment scientist ) John jestin துணையுடன் ஒலி அளவை கண்டறியும் கருவியின் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். சோதனை செய்யப்பட்ட 30 அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 14 பேருந்துகள் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு தலா 1000ம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Views: - 131

0

0