வெண்டிலேட்டர் வழியாக நுழைந்து மர்ம நபர்… ஓட்டலின் உள்ளே காத்திருந்த அதிர்ச்சி… வெளியான சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
25 May 2024, 12:00 pm
Quick Share

கோவையில் வெண்டிலேட்டர் வழியாக நுழைந்து ஓட்டலில் திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சி.எஸ் மீல்ஸ் என்ற ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் இரவு வேலை முடிந்து ஊழியர்கள் பூட்டி சென்றனர். இந்நிலையில், நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர், ஓட்டலின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டு இருந்த வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்து உள்ளார்.

பின்னர் கல்லாப்பெட்டி இருக்கும் இடத்தை தேடி பிடித்து அதில், பணம் இருக்கிறதா? என துலாவி உள்ளார். ஆனால் பணம் ஏதும் இல்லாததால் அங்கு இருந்து வந்த வழியே திரும்பி சென்று உள்ளார். இதனை தொடர்ந்து, காலையில் ஓட்டலை திறந்தனர். அப்போது ஓட்டலில் திருட முயற்சி நடைபெற்றது தெரியவந்தது.

மேலும் படிக்க: காதை கிழித்த ஏர்ஹாரன் சத்தம்… அரசு பேருந்து ஓட்டுநர்களை அலறவிட்ட போக்குவரத்து போலீசார்…!!!

இது குறித்து ஓட்டல் உரிமையாளர் ஹிகார் (51) ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரின் உருவம் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்து வருகின்றனர்.

நள்ளிரவில் வெண்டிலேட்டர் வழியாக ஓட்டலுக்குள் புகுந்து திருட முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 101

0

0