மின்சாரம் தாக்கிய சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரம்… புலன் விசாரணை முடிந்ததும் நடவடிக்கை ; கோவை காவல் ஆணையர் தகவல்

Author: Babu Lakshmanan
25 May 2024, 1:01 pm
Quick Share

சந்தேகத்திற்கு மாறான மரணம் என்ற வழக்கை விபத்து என்று மாற்றி புலன் விசாரணை நடத்தி வருவதாக கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்

கோவை மாநகர காவல் ஆணையர் அறிவுரைகளின்படி தனியார் மருத்துவமனை மற்றும் Young Indians உடன் கோவை மாநகர காவல் துறை இணைந்து நடத்தும் காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான மார்பகப் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் பாத பராமரிப்பு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் கோவை பி.ஆர்.எஸ் மைதானம் வளாகத்தில் நடைபெற்றது வருகிறது.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சரவணன்,ஆயுதப்படை உதவி ஆணையர் சேகர் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாநகர் காவல் ஆணையர் பாலகிருஷ்ணனிடம், கோவை சின்னவேடம்பட்டி ராணுவ குடியிருப்பில் மின்சாரம் தாக்கி சிறுவர்கள் உயிர் இழந்தது குறித்து கேள்விக்கு:- முதலில் சிஆர்டிசி 174 சந்தேகத்திற்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் தொடர் விசாரணையில் 304-A வழக்கு பதிவு செய்து விபத்து என்று வழக்கு மாற்றப்பட்டது.

விபத்து ஏற்படுத்தியவர் மீதும், விபத்து ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது குறித்து தற்பொழுது புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. மாநகராட்சி, மின்வாரியத்தில் உரிய அனுமதியில்லாமல் பூங்காவல் மண்ணுக்கு அடியில் மின்சாரம் இணைப்பு கொண்டு வந்துள்ளனர். அது சம்பந்தப்பட்ட நபர் மீதும், ஒப்பந்ததாரர் மீதும் புலன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

தற்போது வரை விபத்து சம்பந்தமாக யார் மீதும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புலன் விசாரணை முடிந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். என்று உறுதி அளித்தார்.

கோவையில் மாநகர் பகுதியில் U-Turn-னால் போக்குவரத்து நெரிசல் சிறிய அளவில் இருந்தாலும் பெரிய அளவில் மக்கள் கருதுகிறார்கள். U-Turnனால் முதலில் இருந்ததை விட தற்பொழுது போக்குவரத்து நேரம் பொதுமக்களுக்கு குறைவாக உள்ளது.ஒரு சில தவறுகளை விரைவில் சரி செய்வதாக கூறினார்.

கோடை காலத்தில் போக்குவரத்து காவலர்களுக்கு உரிய உடை வழங்கப்பட்டதாகவும், முக கவசங்களை ஒரு சில காவலர்கள் சரிவர அணியாமல் இருக்கின்றனர். மேலும், காவலர்களுக்கு உடல் ரீதியாக, மன ரீதியாக அழுத்தங்களை போக்குவதற்காக இதுபோல மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தி வருகிறோம், எனக் கூறினார்.

Views: - 121

0

0