அம்பேத்கரின் திருவுருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்கள் ; திருவள்ளூரில் பதற்றம்… போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
2 January 2023, 12:38 pm
Quick Share

திருவள்ளூர் அருகே அம்பேத்கரின் திருஉருவ சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள நெடுவரம்பாக்கத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையில் முகத்தை சிதைத்தும், கை மற்றும் கண்ணாடியை சேதப்படுத்தியும் மர்ம நபர்கள் சென்றுள்ளனர்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து சோழவரம் காவல் நிலையத்தில் அளித்தனர். அதன்பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு அம்பேத்கரின் திருவுருவ சிலையை சேதப்படுத்திய மர்மநபர்களை தேடி வருகின்றனர். அங்கு பாதுகாப்பிற்காக சேதப்படுத்தப்பட்ட இடத்தில் துணியால் மூடியுள்ளனர்.

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

  • Duraimurugan 200 திமுக ஜெயிக்கணும்… 34 தொகுதி எதிர்க்கட்சிகளுக்கு விட்டறணும் : இதுதான் நடக்கணும்.. அமைச்சர் துரைமுருகன்!
  • Views: - 358

    0

    0