ஆம்புலன்ஸில் வந்து வாக்களிப்பு : ஜனநாயக கடமையை நிறைவேற்றிய 68 வயது மூதாட்டி

Author: kavin kumar
19 February 2022, 1:59 pm

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 31-வது வார்டில் ஆம்புலன்ஸில் வந்து 68 வயது மூதாட்டி வாக்களித்தார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா மற்றும் நுண் பார்வையாளர்கள் மூலம் வாக்குப்பதிவு கண்காணிப்பு கண்காணிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாநகராட்சி 31வது வார்டுக்கு உட்பட திருமலைசாமி புரத்தில் வசித்து வருபவர் அம்சா. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதற்காக உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். பின்னர் அவரால் நடந்து செல்ல இயலாது என்பதால் ஸ்டெக்சர் மூலம் வாக்குச்சாவடிக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர் அவர் தெரிவித்த சின்னத்திற்கு தேர்தல் அதிகாரி வாக்களித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?