கலவரத்தை தூண்டி தமிழக மக்களை பிளவுப்படுத்த அண்ணாமலை முயற்சி : நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 நவம்பர் 2023, 4:34 மணி
Masoor - Updatenews360
Quick Share

கலவரத்தை தூண்டி தமிழக மக்களை பிளவுப்படுத்த அண்ணாமலை முயற்சி : நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு பேச்சு!!

மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அண்ணாமலை அவர்களை நேரில் பார்த்தது இல்லை. அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் படித்திருக்கிறார்கள். அவருடைய அரசியல் எப்படி இருக்கும் என்றால், களத்தூரில் தங்கியிருக்கிறார். அவர் வீட்டு முன்னாடி பெரிய கம்பம் நடுகிறார். எந்த உத்தரவும் வாங்காமல் கம்பம் நடுகிறார்.

நான் வெளியில் பார்க்கிறேன். பார்த்ததை வைத்து சொல்கிறேன். அவர் ஏன் இப்படி செய்ய வேண்டும். குதர்க்கம் பண்ண வேண்டும்.கலவரம் உண்டுபண்ணனும். மக்களை பிளவுபடுத்தனும். இதுவே அவர்களுடைய நோக்கமாக இருக்கிறது.

தமிழ்நாட்டை சீர்குலைக்க வேண்டும். மதவெறிகாடாக ஆக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். குஜராத்தில் எப்படி செய்தார்களோ.. புல்வாமாவில் எப்படி இவர்கள் செய்துவிட்டு சொன்னார்களோ.. கவர்னர் மாளிகையிலும் அப்படி.. ரொம்ப வேடிக்கையாக இருக்கிறது.
ரவுடியை வெளியே கொண்டுவருவாங்க.. அவர் வாட்டர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றிவிட்டு அப்படி வைக்கிறார். அதற்குள் கேட் இடிந்தது. கவர்னர் மாளிகை இடிந்துவிட்டு என்று வட இந்தியா முழுவதும் பரபரப்பை கூட்டுறாங்க..

மோடி அவர்கள் 2 கோடி வேலை வாய்ப்பு தருவார்கள் என்று சொன்னார்கள். ஆனால் நிறைவேறியிருக்கிறதா. தமிழகம் வஞ்சிக்கப்படுவது கவலையளிக்கிறது. முதலில் ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்தந்த மக்களுக்கு அனைத்து துறைகளிலும் வங்கி, அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், தனியார் இப்படி அனைத்து துறைகளிலும் என்னென்ன விகிதாசாரப்படி மக்கள் இருக்கிறார்களோ.. அப்படி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

இருக்கிறர்கள் அதீத நாட்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கிறவர்கள் விஆர்எஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். இது தான் கிளீன் இந்தியா. இது தான் சுத்திகரிக்கப்பட்ட இந்தியா.

உண்மையான இந்தியா உருவாக வேண்டும் என்றால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இது தான் தலையாய கோரிக்கை. தமிழகத்தில் சமூக நீதி காத்த தமிழகம் என்று சொல்வதற்கு முன்னாடி பீகாரில் அதனை நிதிஷ் குமார் அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். இப்போது ஒன்னும் கெட்டுப்போகல.. வெறும் 300 கோடி ரூபாய் இருந்தால் போதும். 3000 ஆசிரியர்கள் கூடுதலாக சம்பளம் கொடுத்து ஒன்றரை மாதத்தில் நாளைக்கே ஆரம்பித்தால் நிறைவேற்றலாம்.

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். கவர்னர் மாளிகையில் உள்ள 100 ஏக்கரில் விளையாட்டு திடல் அமைக்க வேண்டும். கவர்னர் பதவி ஒன்றுமில்லாதது.

கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு கையெழுத்து போடுவதை விட்டுவிட்டு அவர் விருப்பத்துக்கு செயல்படுகிறார். இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 250

    0

    0