5 வயது சிறுமியை நாய் கடித்த விவகாரம்… சமூக வலைதளங்களில் வெளியான தகவல் ; சென்னை மாநகராட்சி மறுப்பு..!!

Author: Babu Lakshmanan
9 May 2024, 2:14 pm
Quick Share

அண்ணா பல்கலைகழக மையத்தில் மழைநீர் கசிவால் பாதிப்படைந்த இரு கேமராக்களும் விரைவில் சரி செய்யப்படும் என்றும், ஸ்ட்ராங் கேமராக்களில் எந்த பாதிப்பும் இல்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், ரிப்பன் கட்டிட சந்திப்பு சிக்னலில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல் அமைத்தல் பணியினைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தவர், பொதுமக்கள் கோடை கால வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால் மாநகராட்சி தரப்பில் முதல்கட்டமாக முக்கியமான போக்குவரத்து சிக்னல்களில் 6 மீட்டர் நீளத்தில் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் சுமார் 40 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. அதே பகுதியில் முடிந்தவரை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பானை வைக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவருக்கு ஸ்கெட்ச்… பயங்கர ஆயுதங்களோடு பதுங்கிய கும்பல்… திமுக பிரமுகர் உட்பட 6 பேர் கைது!!

இது வெற்றி பெறும் பட்சத்தில் மழைக்காலங்களில் இந்த மேற்கூரைகளை சற்று மாற்றி அமைத்து பைபர் மூலம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து நடக்கும் நாய் கடி சம்பவங்களை பொறுத்தவரை விலங்குகள் நலத்துறை விதிகள் சவாலாக உள்ளது மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையிடம் அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு இல்லை. அவற்றை ஏற்படுத்த நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்ந்து, பிராணிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் இல்லை என்பது தான் உண்மை. நாய்களை குறை சொல்வதை விட வளர்ப்பவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நாய்க்கடி ஏற்பட்ட 5 வயது குழந்தைக்கு ரேபிஸ் நோய் தொற்று உள்ளது என்பது தவறான தகவல். தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இன்று மதியம் 2 மணி அளவில் அறுவை சிகிச்சை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் மன ரீதியான பாதிப்பு இருக்கலாம், அதற்கும் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாய் கடிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பிறகு நாய் வளர்ப்பு செய்பவர்கள் அதற்கு பதிவு செய்வது அதிகரித்துள்ளது. ஆன்லைன் மூலம் சுலபமாக பதிவு செய்யமுடியும். செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்ப்பவர்கள் பதிவு செய்ய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படும். நாய்களை குறை சொல்வதை விட வளர்ப்பவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கருத்தடை நடைமுறை மட்டும்தான் பின்பற்றப்பட வேண்டி உள்ளது. ஒத்துழைப்பு கொடுக்காத நேரத்தில் விலங்குகள் நல வாரியம் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேசிய அளவில் பேசப்பட வேண்டிய விசியம் அது. நாய்கள் வளர்ப்பவர்களிடம் பழகுவதைப் போலவே வெளியில் மற்றவர்களிடமும் பழகாது. 23 வகையான நாய்கள் இனப்பெருக்கம் செய்வதோ இறக்குமதி செய்வதோ சட்ட விரோதமாக விற்பனை செய்வதோ தடை செய்யப்பட்டு மத்திய அரசுதான் கொண்டு வந்தது, அதற்கு இடைக்கால தடை பெற்று சென்னை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன இது தான் நிலை.

நாய்க்கடி ஏற்பட்ட குழந்தைக்கு ரேபிஸ் நோய் தொற்று உள்ளது என்பது தவறான தகவல், தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இவ்வளவு கடுமையான பாதிப்பு ஏற்பட்டதால் மன ரீதியான பாதிப்பு இருக்கலாம், அதற்கும் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாய் கடிப்பு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கு பிறகு நாய் வளர்ப்பு செய்பவர்கள் அதற்கு பதிவு செய்வது அதிகரித்துள்ளது, ஆன்லைன் மூலம் சுலபமாக பதிவு செய்ய முடியும்.

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைகழக மையத்தில் மொத்தம் 584 கேமிராக்கள் மொத்தமாக உள்ளது, 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்துள்ளது, அது சரி செய்யப்பட்டுள்ளது. மழைநீர் கசிந்ததால் இரு கேமராக்கள் பழுதடைந்தன, ஸ்ட்ராங் ரூம் கேமராக்களில் எந்த பாதிப்பும் இந்த பிரச்சனையும் விரைவில் சரி செய்யப்பட்டு விடும், எனக் கூறினார்.

  • EY மூச்சுவிடக் கூட நேரமில்லை… பணிச்சுமையால் இளம்பெண் மரணம் : தாய் பரபரப்பு புகார்!
  • Views: - 269

    0

    0