தஞ்சையில் மேலும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை : கணித ஆசிரியர் கைது…
Author: kavin kumar5 February 2022, 3:42 pm
தஞ்சை : தஞ்சை அருகே தனியார் பள்ளி ஆசிரியர் சக மாணவர்கள் முன் பிளஸ்-2 மாணவியை தகாத வார்த்தைகளை கூறி திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சையை அடுத்துள்ள பருத்தியப்பர் கோயில் பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் கருணாநிதி என்பவரின் 17 வயது மகள் ஒரத்தநாடு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பள்ளி மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மாணவியை பள்ளியின் கணித ஆசிரியர் சசிகுமார் என்பவர் சக மாணவர்கள் முன் தகாத வார்த்தைகளை கூறி திட்டியதால் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வதாக தன்னுடன் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு வாட்ஸ்- அப் மூலம் மெசேஜ் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் சசிகுமாரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.