அண்டை வீட்டாருடன் சண்டை : காணாமல் போன காது.. தகராறில் காதை கடித்து துப்பியவர் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2022, 5:52 pm
Ear Cut -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே மணல் கொட்டிய தகராறில் காதை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ளது பூனை கவுண்டன்பட்டியை சேர்ந்த ஆனந்த் குமார் என்பவர் வீட்டின் முன்பாக மண் கொட்டி வைத்துள்ளார்.

இதன் காரணமாக அவரது வீட்டின் அருகே இருந்த காந்தி ராஜனுக்கும் ஆனந்தகுமார் இருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது.

இந்நிலையில் ஒருகட்டத்தில் வெறுப்படைந்த காந்திராஜன், ஆனந்தகுமார் வலது பக்க காதை துண்டாகக் கடித்து துப்பி விட்டார். இதனை அடுத்து வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அப்போது ஆனந்தகுமாருக்கு பணியில் இருந்த டாக்டர் மகாராஜன் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Views: - 817

0

0