திண்டுக்கல்லில் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி : மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Author: kavin kumar
7 February 2022, 2:20 pm

திண்டுக்கல் : சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஏடிஎம்-ல் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடியில் உள்ள டிஐஜி அலுவலகம் அருகே ஆயுதப்படை மைதானம் நுழைவுவாயிலில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம்-ல் நேற்றிரவு மர்ம நபர்கள் சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். நீண்ட நேரமாக ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இந்நிலையில் இன்று காலை ஏடிஎம் மையத்திற்கு வந்த பொதுமக்கள் ஏடிஎம் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் டிஐஜி அலுவலகம் அருகாமையில் நடந்த இந்த திருட்டு முயற்சி சம்பவமானது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!