நீட் விவகாரத்தில் புதுச்சேரியின் நிலைப்பாடு என்ன…?? முதல்வருக்கு நாராயணசாமி கேள்வி…

Author: kavin kumar
7 February 2022, 1:57 pm
Quick Share

புதுச்சேரி : நீட் விவகாரத்தில் புதுச்சேரி அரசின் நிலைப்பாடு என்ன என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாராயணசாமி வெளியிட்டுள்ள விடியோவில் கூறியிருப்பதாவது;-எந்த மாநில அரசின் மசோதாவையையும் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும், விளக்கம் கேட்கலாம், ஆனால் தமிழக ஆளுநர் செய்தது அதிகார மீறிய செயல் என்றும், ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என குற்றச்சாட்டிய அவர், நீட் விவகாரத்தில் தமிழகத்தில் சட்டமன்றத்தை கூட்டி முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்கள், இந்நிலையில் நீட் விவகாரத்தில் புதுச்சேரி மாநிலத்தின் நிலை என்னெ என்பதை முதல்வர் ரங்கசாமி விளக்க வேண்டும். மேலும் நீட்டை ஆதரிக்கின்றாரா…? மருத்துவ மாணவர்களுக்கு துரோகம் விளைவிக்கின்றாரா என்பதை மாநில மக்களுக்கு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டில் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களை வஞ்சித்து வரும் வேலையில், கட்டவுட் கலாச்சாரத்தை ஆரம்பித்துள்ளார் என்றும், புதுச்சேரி அரசு பேனர் வைக்கும் அரசாக மாறியுள்ளதாக விமர்சனம் செய்தார். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ஆளுநர் கிரண்பேடி, மத்திய பாஜக அரசின் எதிர்ப்பையும் மீறி கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு வாரியப்பதவி வழங்கினோம், ஆனால் முதல்வர் ரங்கசாமிக்கு தற்போது எந்த தடையும் இல்லாத நிலையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ஏன் வாரியபதவிகளை வழங்கவில்லை என நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Views: - 986

0

0