ஆட்டோ ஓட்டுநர் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை : இளைஞர் கைது.. பகீர் கிளப்பிய கொலைக்கான காரணம்!!

Author: Babu Lakshmanan
23 January 2023, 8:57 pm

கோவை அருகே ஆட்டோ ஓட்டுநரை இளைஞர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காளப்பட்டி அருகே உள்ள வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (47). மினி லோடுஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை தனது ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது, அங்கு வந்த இளைஞர், திடீரென ரவி மீது பெட்ரோல் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார். தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்ப முயன்ற நபரை பிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதில், படுகாயமடைந்த ரவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரவி நேற்று மாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையி்ல், ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேரு நகரில் வசித்து வரும் விருதுநகரை சோ்ந்த பூமாலை ராஜா என்பதும், வேலையில்லாத விரக்தியில் ரவியை கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து ரவியின் உறவினர்கள் குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், ரவியின் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் கோவை மாவட்ட நிர்வாகம் கல்வி உள்ளிட்ட பொருளாதார உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?