ஆயுத பூஜையில் ஒரு அமர்க்களம்… ஜவ்வுமிட்டாய் முதல் மம்மி – டாடி பாக்கு வரை… 90s கிட்ஸ்கள் விரும்பும் தின்பண்ட கடை திறப்பு!!

Author: Babu Lakshmanan
4 October 2022, 4:07 pm

1990 கால கட்டங்களில் தமிழகத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் சாலையோர கயிற்றுக் கட்டில் கடைகள் மிகவும் பிரபலம். இப்படிப்பட்ட கடைகளில் வயதான தாத்தா, பாட்டிகள் 90ஸ் கிட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் 1990 காலகட்டங்களில் பிறந்து குழந்தைகளாக வளர்ந்து வந்த, தற்போதைய இளைஞர்கள், இந்த கடைகளில் அதிக அளவில் ஈக்களாக மொய்த்துக் கொண்டிருப்பார்கள்.

1990-களில் பள்ளிக்கு சென்று படித்த குழந்தைகளின் தின்பண்டமே இந்த மிட்டாய்கள்தான். காலம் மாற, மாற அந்த மிட்டாய்களும் மாறிடுச்சு. ஆனாலும், 90-ஸ் கிட்ஸ் பலரும் சின்ன வயசில் சாப்பிட்ட மிட்டாய்களை மறுபடி சுவைத்து பார்த்திட மாட்டோமான்னு பல நாட்கள் ஏங்கியிருக்காங்க.

கரூரில் மீண்டும் அந்த மிட்டாய்கள் எல்லாத்தையும் பெரியவங்ககிட்டேயும், இப்போ உள்ள குழந்தைங்ககிட்டேயும் கொண்டு சேர்க்கணும்னு 90-களில் விற்கப்பட்ட மிட்டாய்களை கஷ்டப்பட்டு தேடி அலைந்து வாங்கி வந்து கரூரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆயுத பூஜை பண்டிகையான இன்று புதிதாக 90ஸ் கிட்ஸ் மிட்டாய் கடை ஒன்றை துவங்கி உள்ளனர்.

ஜவ்வு மிட்டாய், தேங்காய் மிட்டாய், தேன் மிட்டாய், அப்பளம், மம்மி டாடி பாக்கு என 90களில் சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மிட்டாய் வகைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள் இந்த கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

  • ajith kumar putting condition on producers for his next movie அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?