நடுரோட்டில் காரில் ஏற்பட்ட தீ விபத்து : ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்.. ஈஷாவுக்கு வந்த போது சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
1 March 2022, 5:31 pm
Car Fire - Updatenews360
Quick Share

கோவை : பெரிய கடை வீதி ராயல் தியேட்டர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் டிராவல்ஸ் வைத்துள்ளார். சிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோகாவில் நடைபெறும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஈரோட்டில் இருந்து வந்த மூன்று பேரை தனது காரில் அழைத்துக்கொண்டு கோவை வந்துள்ளார்.

அப்போது கார் பெரியகடைவீதி ராயல் தியேட்டர் அருகே வந்தபோது, காரின் முன் பகுதியில் இருந்து புகை எழுந்துள்ளது. இதையடுத்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட தங்கராஜ் மற்றும் காரில் இருந்த 3 பேர் உடனடியாக காரை விட்டு வெளியே இறங்கினர்.

மேலும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த தீயணைப்பான் கொண்டு தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் கார் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் துவங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

கார் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கான காரணமாக கூறப்படுகிறது.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 694

0

0