அரசுப் பள்ளியில் சாதி பாகுபாடு… ஒரு வாரமாக மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர் ; எம்எல்ஏ பேச்சுவார்த்தைக்கு பின் சமரசம்…!!!

Author: Babu Lakshmanan
5 December 2022, 7:01 pm

திருவள்ளூர் அருகே அரசு பள்ளியில் சாதிய பாகுபாடி காட்டுவதாகக் கூறி, ஒருவார காலமாக மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பாத நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் தத்தமஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் 71 மாணவர்கள் படித்து வந்த நிலையில், 19 பழங்குடியின மாணவர்கள் தலைமை ஆசிரியர் பாரபட்சம் காட்டுவதாக கூறி, ஒரு வார காலமாக அவர்களை பள்ளிக்கு பெற்றோர்கள் அனுப்பவில்லை.

தற்போது அதே கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாததால், பள்ளிக்கு ஒருவர் கூட படிக்க வராததால் பள்ளி வெறிச்சோடியது. பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், வட்டாரக் கல்வி ராஜ்குமார் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் பெற்றோர்களுடன் சமரசம் மேற்கொண்டனர்.

பள்ளி தலைமை ஆசிரியை ஜாதிய ரீதியில் பாகுபாடு காட்டவில்லை என்றும், அதனால் அவரை அதே பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி மற்றொரு தரப்பினர் 50 மாணவர்களை இன்று பள்ளிக்கு அனுப்பாததால், பள்ளிக்கு ஒரு மாணவரும் வராததால் பெற்றோர்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும், பழங்குடியின குடும்பங்களிடம் நேரில் சென்று மாணவர்களை பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தினர். பின்னர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரின் சமரசத்தை ஏற்று நாளை முதல் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதாக இருதரப்பை சேர்ந்த பெற்றோர்களும் தெரிவித்தனர்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?