மரத்தில் ஏறி கீழே இறங்க தெரியாமல் 3 நாள் தவித்த பூனை : தீயணைப்புத்துறையினரின் முயற்சியால் ஏற்பட்ட நெகிழ்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
31 January 2022, 4:20 pm
Cat Stuck in Tree - Updatenews360
Quick Share

கோவை : வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில், மூன்று நாட்களாக மரத்தில் தவித்த பூனைக்குட்டியை மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்க பாராட்டினர்.

கோவை வடவள்ளி அடுத்த பாப்பநாயக்கன் புதூர் பகுதியில் உள்ள, நியூ தில்லை நகர் 10வது வீதியில், உயரமான மரத்தில் பூனைக்குட்டி ஒன்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஏறியுள்ளது.

மீண்டும் கீழே இறங்க தெரியாமல் தவித்த பூனைகுட்டி, மரத்தின் மேல் இருந்தபடி, கத்திகொண்டே இருந்துள்ளது. மூன்று நாட்களாக உணவின்றி, தண்ணிரும் இல்லாமல் தவித்த, பூனைகுட்டியின் அலறும் சத்தம் கேட்டுள்ளது.

நாளாக நாளாக சத்தங்கள் குறைந்து வந்ததால் அருகில் இருந்தவர்கள் இது குறித்து உடனடியாக, தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மரத்தின் மீது ஏறி பூனைகுட்டியை மீட்க முற்பட்டனர்.

ஆனால் தீயணைப்பு நிலைய வீரர்களை கண்டு மேலும் பதற்றமடைந்த பூனைக்குட்டி மேலும் கீழும் ஓடியது. இதனால் பூனைக்குட்டியை மீட்க சற்று கடுமையாக போராடினர்.

மரத்தல் இருந்து சுவருக்கு வந்த பூனைக்குட்டி கீழே குதிக்க பயந்தது. ஒரு வழியாக சுவற்றில் இருந்து கீழே மரத்திற்கு தாவி வந்தது. நீண்ட நேர போராட்டத்திற்க்கு பின்னர் பூனைக்குட்டியை பத்திரமாக மீட்டனர். மீட்ட பூனைக்குட்டியை கீழே இறக்கி விட்டதும் அது அருகில் இருந்த வீடுகளுக்குள் சென்று ஒடி ஒளிந்து கொண்டது. பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கிருந்து கிளம்பினர்.

Views: - 1187

0

0