வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நகை பறிப்பு… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 2:35 pm

வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு… அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த 25ம் தேதி வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

கோவை நகரில் அதிகரித்து வரும் செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த 25ம் தேதி காந்திபுரம் பகுதியில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஜானகி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க செயினை பறித்து சென்ற சிசிடிவி காட்சகள் வெளியாகி உள்ளது. இருசக்கர வாகனத்தில் காலை 7 மணியளவில் வந்த மர்மநபர்கள் , கண்ணிமைக்கும் நேரத்தில் ஜானகியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

https://vimeo.com/859295841?share=copy

இதில் நிலை தடுமாறி கீழே குப்புற விழுந்த ஜானகி பின்னர் எழுந்து சுதாரிப்பதற்குள் அவர்கள் மர்மநபர்கள் தப்பி செல்கின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.இது குறித்து காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?