வார இறுதியில் அடிச்சு தூக்கிய தங்கம் விலை… புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை கடந்து விற்பனை…!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 10:36 am
Quick Share

வார இறுதியில் அடிச்சு தூக்கிய தங்கம் விலை… புதிய உச்சமாக ரூ.46 ஆயிரத்தை கடந்து விற்பனை… அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.46,160க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.65 உயர்ந்து ரூ.5,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம், புதிய உச்சமாக ஒரு சவரன் ரூ.46 ஆயிரத்தை கடந்து விற்கிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இல்லலாமல், ஒரு கிராம்  ரூ.77,50க்கும், கிலோ ரூ.77,500-க்கும் விற்பனையாகிறது.

Views: - 1289

0

0