ஆன்லைன் மூலம் மலர்ந்த காதல்… தமிழக – கேரள போலீஸாருடன் மல்லுக்கட்டிய புதுமண தம்பதி.. கடவுளாக வாட்ஸ்அப் காலில் வந்த நீதிபதி..!!

Author: Babu Lakshmanan
1 December 2022, 12:00 pm
Quick Share

திருவொற்றூரில் அண்ணா யுனிவர்சிட்டி பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் மூலம் படித்த மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட காதலால் திருமணம் செய்து காதலர்களுக்கு பெண்ணின் பெற்றோர்கள் எதிர்ப்பால் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

சென்னை திருவொற்றியூர் பகுதி சேர்ந்த காமேஸ்வரன் (22). இவர் மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணி செய்து கொண்டே அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டப்படிப்பு ஆன்லைனில் மூலம் படித்து வந்துள்ளார். இதேபோன்று கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஜிதா (21) பிஏ பட்டதாரியான இவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்பினை படித்து வந்தார்.

இதனிடையே, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் வகுப்பின் மூலம் சுஜிதாக்கும், காமேஸ்வரனுக்கும் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, பின்னர் கடந்த 22ஆம் தேதி சுஜிதா கேரளாவில் இருந்து காதலன் காமேஸ்வரனை திருமணம் செய்வதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.

இதையடுத்து, காமேஸ்வரன் தனது காதலியை சென்னை சென்ட்ரலில் உள்ள கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு, பின்னர் ரிஜிஸ்டர் ஆபீசில் தனது திருமண பதிவினை பதிவு செய்தார். இதனிடையே, பெண்ணின் பெற்றோரான பெண்ணை காணவில்லை என கேரளா முடிச்சூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் காணவில்லை என பெண்ணின் தந்தையான சந்திரன் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, மொபைல் போனை வைத்து ஜிபிஎஸ் கருவி மூலம் பெண் சென்னையில் இருப்பதாக கண்டுபிடித்து கேரளாவில் இருந்து வந்த போலீசார் சென்னையில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதனால், காதலர்கள் இருவரும் தலைமறைவாக இருந்த நிலையில், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதை அறிந்த கேரளா போலீசார் திருவொற்றியூர் போலீசாரை நாடி, பெண்ணின் பெற்றோர் எங்களிடம் பெண்ணை காணவில்லை என புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் பெண்ணை அழைத்துச் செல்ல வந்துள்ளதாக கூறினர். ஆனால், பெண்ணோ தன் காதலனை விட்டு பிரிய மனமில்லாமல் காதலுடன் வாழ்வதாக கூறியுள்ளார். இதனால், கேரளா போலீசார் உடன் பெண் போலீசார் யாரும் வராததால் போலீசார் தயக்கம் காட்டினர்.

உடனடியாக அனைத்து மகளிர் காவல்நிலையம் ஆய்வாளர், நீதிபதியை வாட்ஸ் அப் கால் மூலம் தொடர்பு கொண்டு காதலர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். இதையடுத்து, காதலர்கள் இருவரும் மேஜர் என்பதால், நீதிபதி விசாரித்த போது, இருவரின் ஒப்புதலின்படி இருவரையும் சேர்த்து வைத்து காதலுடன் அப்பெண்ணை அனுப்பி வைத்தனர்.

ஆன்லைன் வகுப்பின் மூலம் காதல் ஏற்பட்டு மாநிலம் விட்டு ஓடி வந்த பெண்ணுடன், பெற்றோர்கள் எதிர்ப்பால், காதலன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Views: - 311

0

0