மீண்டும் சர்ரென சரிந்த தங்கத்தின் விலை… ஒரே நாளில் ரூ.240 குறைவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

Author: Babu Lakshmanan
18 January 2024, 10:45 am
Quick Share

மீண்டும் சர்ரென சரிந்த தங்கத்தின் விலை… ஒரே நாளில் ரூ.240 குறைவு ; ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா…?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. ஆனால், 2024ம் ஆண்டு தொடங்கியது முதலே தங்கம் விலை சரிந்து வருவது ஆபரண பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் நேற்று தங்கம் விலை ரூ.320 குறைந்த நிலையில் இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 46,240 ரூபாய்க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 30 ரூபாய் குறைந்து 5780 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.40 காசுகள் குறைந்து 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

.

Views: - 4136

0

0