மீண்டும் மீண்டுமா…? இன்றும் ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 November 2023, 10:28 am
Gold Rate - Updatenws360
Quick Share

மீண்டும் மீண்டுமா…? இன்றும் ஜெட் வேகத்தில் அதிகரித்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆனால், கடந்த வாரம் குறைந்து வந்த தங்கம் விலை, இஸ்ரேல் – ஹமாஸ் போர் காரணமாக கிடுகிடுவென உயர்ந்தது.

நேற்று உயர்ந்து காணப்பட்ட தங்கத்தின் விலை, இந்த வாரத்தில் 2வது நாளாக அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.45,840 க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.5,730-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 168 உயர்ந்து ரூ.37,552 க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.21 உயர்ந்து ரூ.4,694-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை இன்று (நவ.21) கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து 79.40 ரூபாய்க்கும், கிலோ ரூ.400 அதிகரித்து ரூ.79,400-க்கும் விற்பனை ஆகிறது.

Views: - 2762

0

0