அடிச்சு தூக்கும் தங்கம் விலை…? ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
21 February 2024, 10:41 am
Quick Share

அடிச்சு தூக்கும் தங்கம் விலை…? ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. பிப்ரவரி மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது.

சென்னையில் நேற்று தங்கம் விலை உயர்ந்த நிலையில், இன்றும் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,480ஆகவும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,810ஆகவும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,280ஆகவும், ஒரு சவரன் ரூ.50,240ஆகவும் விற்பனையாகிறது. 

வெள்ளி விலை 20 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.77.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 3693

0

0