கலீம் உடன் கைக்கோர்த்த சின்னத்தம்பி : குட்டை கொம்பனை விரட்ட களமிறங்கிய கும்கி யானைகள்… வனத்துறையினர் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 May 2022, 4:02 pm
Elephant - Updatenews360
Quick Share

ஒற்றை யானையை விரட்ட இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது முப்பதுக்கு மேற்பட்ட வனத்துறை அதிகாரிகள் காட்டுயானை இருக்கும் இடத்தை தேடி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவுக்கு கன்னிவாடி வன சரகத்திற்க்கு உற்பட்ட பன்றிமலை, அழகுமலை, தேனிமலை, கோம்பை, பண்ணைபட்டி ஒரு பட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

யானைகள் தாக்குவதால் விவசாயிகள் உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைகொம்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதி விவசாய நிலங்கள் சாலைகளில் வலம் வந்து விடுகிறது.

அதேபோல் பொதுமக்களை துரத்துவதும் வீடுகளை தாக்குவதும் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் தனிமையிலிருந்து தர்மத்துப்பட்டி செல்லும் சாலையில் வனத்துறை சோதனைச் சாவடி அருகே யானை வந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் தோனிமலை கீழ்மலை பகுதியான கோம்பை, நாய்ஓடைப் பகுதியிலும் தொடர்ந்து சுற்றிவருகிறது இறங்கி யானையை பிடிக்கும் முயற்சியில் தற்போது வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அவனைப் பிடிப்பதற்காக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 57 வயதுடைய கலீம் கடந்த 3 தினங்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டது. அதேபோல் கோவை தடாகம் பகுதியின் சூப்பர்ஸ்டாராக விளங்கிய சின்னத்தம்பி யானை நேற்று கொண்டு வரப்பட்டது.

மனிதர்களை, விலங்குகளை தாக்காமல் குடியிருப்பு பகுதிகளை நோக்கி பயணித்த சின்னத்தம்பி யானை சமீபத்தில் தான் வனத்துறையால் பிடிக்கப்பட்டு, தற்போது கும்கியானையாக களமிறங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஒற்றை யானை எங்கு உள்ளது என்பது குறித்து 30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். யானை பகல் நேரத்தில் உறங்குவதற்காக ஒரு சில இடத்தை தேர்வு செய்யும் அந்த இடத்தை கண்டறிந்த உடன் உடனடியாக கும்கி யானைகள் அழைத்துச் செல்லப்படும்.

மேலும் சமநிலையில் இல்லாத பகுதியாக உள்ளது. அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைமேல் பகுதியாகும் ஆகவே முக்கிய வேலையை எவ்வாறு கொண்டு செல்வது கன்னிவாடி பண்ணைபட்டி அருகே உள்ள கோம்பை வனப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

காட்டுயானை இருக்குமிடம் தெரிந்தவுடன் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள இரண்டு கும்கி யானைகளும் அழைத்துச் செல்லப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Views: - 727

0

0