கோவை கார் வெடிப்பு சம்பவம்… கிஷோர் கே சுவாமி மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு..!!

Author: Babu Lakshmanan
3 November 2022, 11:24 am

கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பதிவிட்டவர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சமூக வலைதளத்தில் அமைதியை குலைக்கும் வகையில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், சென்னையில் வசித்து வரும் கிஷோர் கே சுவாமி (@ Sansbarrier) என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறுப்புக்குரிய பிரச்சாரத்தை செய்துள்ளார். இதில், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பதிவிட்டுள்ளார்.

கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் மாநகர
சைபர் கிரைம் போலீசார் பொது அமைதியை குலைக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக கிஷோர் கே சுவாமி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?