மத்திய குழுவை கவர்ந்த கோவை மீடியா டவர்…. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நேரில் பார்வையிட்ட 14 நபர்கள் கொண்ட குழு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 11:35 am

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்திற்கு ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ‘மீடியா டவர்’ (MEDIA TOWER) என்னும் எல்இடி டவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை KCP Infra Limited நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த நிலையில் தாமஸ்பார்க் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மீடியா டவரினை மத்திய அரசின் கூடுதல் இயக்குநர் திரு.ராஜீவ் ஜெயின் அவர்கள் தலைமையிலான டெல்லி அச்சு மற்றும் காட்சி ஊடக செய்தியாளர்கள் 14 நபர்கள் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர்.

அதே போல அலங்கார செயற்கை நீர்வீழ்ச்சி (Water Falls) அமைப்பினை 14 நபர்கள் கொண்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். இவர்களுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பொது மேலாளர் திரு.பாஸ்கரன், உதவி பொறியாளர் திரு.கமலக்கண்ணன் ஆகியோர் உடனநிருந்தனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!